வருகிறதா புரெவி புயல்.? வலுபெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை ஆய்வு மையம எச்சரிக்கை
டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது, அந்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலைகொண்டு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறும் என்றும் புதிதாக உருவாகும் புயல் டிசம்பர் 2ம் தேதி மாலை இலங்கை கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
புயலாக வலுப்பெறும்:
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது, அந்த வகையில், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து 750 கிமீ, கன்னியாகுமரியிலிருந்து தென்கிழக்கு பகுதியில் 1150 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை:
இதன் காரணமாக, வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரெவி:
இதற்கிடையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தென்தமிழகத்தை வருவதால் புரெவி என பெயர் வைக்கப்படும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவித்துள்ளது.