#Breaking:தீவிர புயல்;தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால்,தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதாகவும்,அதற்கு ‘அசானி’ என பெயர் வைத்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,வரும் 12 மணி நேரத்தில் அசானி புயல் தீவிர புயலாக வலுபெற்று ஆந்திரா,ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் எனவும்,இதனிடையே,தமிழகத்தில் இன்றும்,நாளையும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி,புதுக்கோட்டை,திருச்சி,அரியலூர்,பெரம்பலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கோவை,கடலூர்,தேனி,திண்டுக்கல்,காரைக்கால்,புதுவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதனிடையே,தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்! “இந்தியா” கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் வரை!
February 18, 2025
நள்ளிரவில் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
February 18, 2025
குல்தீப்பா? சக்கரவர்த்தியா? போட்டிக்கு முன் அடித்துக்கொள்ளும் ரோஹித் சர்மா vs கம்பீர்.!
February 18, 2025
பெண்களுக்கென ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
February 18, 2025