ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கோடி மதிப்புடைய உலோகச் சிலைகளை கடத்திய வழக்கில் பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்வாயில் மறைத்து வைக்கப்பட்ட பல கோடி மதிப்புடைய 7 உலோக சுவாமி சிலைகளை, சிலைகள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இரு நடராஜர், நாக கன்னி, காளி, முருகன், விநாயகர், நாக தேவதை ஆகிய 7 சிலைகள் பறிமுதல் செய்தனர். சிலைகளை கடத்திய வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் பாஜக சிறுபான்மை அணி செயலாளர் அலெக்சாண்டர், இரண்டு காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.
இந்த 7 சுவாமி சிலைகளை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற இரு காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். அருப்புக்கோட்டையை சேர்ந்த காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன் ஆகியோரை சிலைகள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிலைகளை பறிமுதல் செய்தனர். இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரும் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் மேலும் இரண்டு பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை தேடக்கூடிய பணியும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எனக்கூறி அலெக்சாண்டர் மூலம் ரூ.5 கோடிக்கு சிலைகளை விற்க முயன்றது தெரிய வந்துள்ளது.
அலெக்சாண்டரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் 2 காவலர்கள் உள்பட 3 பேர் சிக்கினர். கைதானவர்கள் அளித்த தகவலின்படி ராமநாதபுரத்தில் மறைத்து வைத்திருந்த 7 சுவாமி சிலைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது என தகவல் கூறப்படுகிறது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…