தொலைபேசி, வாட்சப் மூலம் வரக்கூடிய செய்திகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

மின்சாரம், பால், குடிநீர் உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவு.

வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மழைநீர் தேங்காதவாறு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் கடமையும், பொறுப்பும் ஆகும்; தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே மீட்க வேண்டும்.

மின்சாரம், பால், குடிநீர் உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள்,வருவாய்துறை, பொதுப்பணித்துறை,வேளாண்துறை,தீயணைப்பு துறைகள் என அனைவரும் தனித்தனியே செயல்படாமல் ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.

மக்களை காக்க வேண்டும் என்பதே நமது இலக்கு; அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். தொலைபேசியிலோ,வாட்ஸ்அப்பிலோ வரக்கூடிய புகார்களை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும்; அதிகாரிகளிடம் தெரிவித்தோம், உடனடியாக நிவர்த்தி செய்தார்கள் என மக்கள் கூறுவதே மிகப் பெரிய பாராட்டு என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்