எமர்ஜென்சியை எதிர்க்க கூடாது என டெல்லியில் இருந்து தூது.. ஜனநாயகத்திற்கே திமுக ஆதரவு – முதல்வர் உரை!
சென்னை பூந்தமல்லி திமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இல்லத் திருமண விழாவில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதன்பின், திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர். இதனால், செம்மொழி அங்கீகாரம் பெற்று தந்தவர் கலைஞர் என்பதை மறந்து விட முடியாது.
பூந்தமல்லியின் உண்மை பெயர் பூந்தன் மல்லி என்பது தான். கொள்கை பிடிப்புள்ள உடன்பிறப்புகள் பிறந்துள்ள இடம். சீர்திருத்த திருமணங்கள் திமுக ஆட்சியில் தான் அங்கீகரிக்கப்பட்டது. 1967ல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று அண்ணா முதல்வரானார். சீர்திருத்த திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என அண்ணா தீர்மானம் நிறைவேற்றினார். நெருக்கடி நிலை காலகட்டத்தில் ஆட்சியை விட ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் அளித்தவர் கலைஞர். எமர்ஜென்சியின்போது ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே ஆதரவு என கூறியவர் கலைஞர்.
இந்திராகாந்தி ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்க்க கூடாது என டெல்லியில் இருந்து தூது வந்தது. ஜனநாயகத்திற்காக எமர்ஜென்சி நிலையை எதிர்த்து ஆட்சியை இழந்தது திமுக. ஆட்சி கலைக்கப்படும் என்ற மிரட்டல்களுக்கு அடிபணியாமல் எதிர்த்தவர் கலைஞர். நாட்டில் ஜனநாயகத்தின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுகேட்கப்படுகிறது. தோல்வி பயம் வந்துவிட்டதால் எதிர்கட்சிகளை அச்சுறுத்தும் வேளையில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
நாட்டில் தற்போது ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா, மக்களாட்சி நீடிக்குமா என்ற சூழல் அமைந்துள்ளது. எதிர்கட்சிகளை மிரட்டுவது, எதிர்க்கருத்து கூறுவோரை அச்சுறுத்தும் பணியில் ஈடுபடுகிறது. 5 மாநிலங்கள் உட்பட வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் பாஜக தோல்வியடையும் என தகவல் வருகிறது. ஏற்கனவே, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஏவியவர்கள் இன்று செல்போனை ஒட்டுகேட்கப்படுகிறது.
டெல்லியில் இன்று முதல் டீசல் பேருந்துகள் இயங்க தடை.!
ஒட்டுக்கேட்பு புகார் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறுகிறார். செய்தவையும் செய்துவிட்டு அமைச்சர் விசாரணை நடத்தப்படும் என்று கூறும் நிலையில்தான் நாடு உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்படுகின்றன. என்ன செய்தாலும், பாஜக தோல்வியை தழுவுவதை தவிர்க்க முடியாது. இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.