காளைகளை தட்டி எழுப்பும் மெரினா புரட்சி படம்.!அனுமதி கொடுக்க முடியுமா..?முடியாதா..?சென்சார்க்கு உயர்நீதிமன்றம் படக் விளாசல்..!
தமிழகத்தில் ஜல்லிகட்டு போராட்டம் தமிழகத்தின் பாரம்பரியத்தை மீட்டு எடுக்கும் போராட்டம் என்று தமிழகம் முழுவதும் இளம்காளைகள் தங்களது பாரம்பரியத்தை காக்க போராடியது.இன்னும் சொல்லப்போனால் ஒட்டுமொத்த தமிழகமே தமிழ் இனமே கொந்தளித்து குரல் கொடுத்தது என்று தான் சொல்லவேண்டும்
இதில் வெற்றி பெற்று சீறி பாய்ந்தது வாடிவாசலில் காளைகள்.இந்நிலையில் இந்த போராட்டத்தில் முக்கிய இடம்பெற்றது மெரினா மற்றும் மெரினாபுரட்சி என்றே அழைத்தனர்.
இந்த போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் மெரினா புரட்சி இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்க வேண்டும் மற்றும் படத்தை வெளியிட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்தஉயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், படம் தொடர்பான ஆவணங்களை சென்சார் போர்டுக்கு மனுதாரர் சமர்ப்பிக்க வேண்டும் என்று இதன் அடிப்படையில் படத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் சென்சார் போர்டு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.