மதிமுகவை திமுகவிடம் இணைத்துவிடலாம்.! வைகோவுக்கு அவைத்தலைவர் துரைசாமி பரபரப்பு கடிதம்.!

vaiko

மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடுங்கள் என அக்கட்சி அவைத்தலைவர் துரைசாமி , கட்சி தலைவர் வைகோவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, மதிமுக சட்டமன்ற அவைத்தலைவர் துரைசாமி தற்போது ஓர் கடிதத்தை எழுதியுள்ளார். அதில் பல்வேறு அதிருப்தி விமர்சனங்ளை அவர் முன்வைத்துள்ளார். குறிப்பாக மதிமுக கட்சியை திமுகவுடன் இணைத்து விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக சட்டமன்ற அவைத்தலைவர் துரைசாமி குறிப்பிட்டுள்ள கடிதத்தில், மதிமுக பொதுச்செயலாளராக துரைவைகோ நியமிக்கப்பட்ட பின்னர் கட்சி விதிகள் பல்வேறு விதமாக மாற்றப்பட்டுள்ளன. கட்சிக்கு முன்னர் இருந்த பெயர் தற்போது மாறிவிட்டது. மக்கள் மத்தியில் சமீப காலமாக அவப்பெயர் உண்டாகி வருகிறது. பழைய உறுப்பினர்கள் தற்போது தங்களை வெளிக்காட்டி கொள்ள மறுக்கின்றனர்.

இதனால், மதிமுகவின் கோட்டை என்று கூறப்படும் கொங்கு மண்டலத்தில் ஈரோடு திருப்பூர் மாநகராட்சி கட்சி நிர்வாகி தேர்தலில் போலி உறுப்பினர்கள் கொண்டு உள்கட்சி தேர்தல் நடத்தி உள்ளனர். 30 ஆண்டுகளாக உங்களது (வைகோ) பேச்சை கேட்டு கட்சியில் இணைந்த தொண்டர்கள் நலனுக்காக மதிமுகவை தாய் கழகத்தோடு (திமுக) இணைத்து விடுங்கள் எனவும் கடிதத்தில் துரைசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்கு முன்னதாக கடந்த 5 முறை தான் கடிதம் எழுதியுள்ளதாகவும் அதற்கு நீங்கள் பதில் கூறவில்லை என்றும், தற்போது இதற்கும் நீங்கள் பதில் கூறவில்லை என்றால் அடுத்த கட்ட நகர்வுக்கு நாங்கள் தயாராகி விடுவோம் எனவும் மதிமுக தலைவர் வைகோவுக்கு மதிமுக சட்டமன்ற அவைத்தலைவர் துரைசாமி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்