கொரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி..!
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 53 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 53 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பணி வழங்க வேண்டியவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 53 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.#coronadeath #doctors #job pic.twitter.com/heJu0DR6h5
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 30, 2021