திருமழிசை சந்தை முழுவதும் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் வேதனை.!
திருமழிசை சந்தை முழுவதும் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் அவதி படுகிறார்கள்.
சென்னை கோயம்பேட்டில் மூடப்பட்ட காய்கறி சந்தை தற்போது திருமழிசை நகரத்தில் இயங்கி வருகிறது மேலும் சாலை இடம் கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருந்தாலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருமழிசையில் வியாபாரிகள் காய்கறி சந்தைகள் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் மேலும் இரவு நேரங்களில் பெய்யும் கனமழையால் காய்கறி சந்தை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது , இதனால் கடைகளுக்குள் நீர் புகுந்ததால் வியாபாரிகள் தங்கள் இடம் இல்லாமல் தவித்து வருகின்றார்கள் . மேலும் அங்கு வந்த 5 ஆயிரம் டன் காய்கறிகளை கொண்டு வந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டு காய்கறி களை எங்கு இறக்குமதி செய்ய என்று தவித்து வருகின்றனர்,
மேலும் ஏற்கனவே சேமிப்புக் கிடங்கு இல்லாமல் காய்கறிகள் நாளொன்றுக்கு தன் டன் கணக்கில் வீணாக குப்பைக்கு செல்வதாகவும் தற்போது மழைக்காலம் என்பதால் காய்கறிகளை எப்படி விற்பனை செய்வது என்று தெரியாமல் திணறி வருவதாக வியாபாரிகள் வேதனையை கூறுகின்றனர், இதனைத் தொடர்ந்து இதற்கு உடனடியாக மழைநீர் தேங்காமல் இருக்க கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.