அதிரடி…கூலிப்படை முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும் – முதல்வர் போட்ட உத்தரவு!

Default Image

தமிழகத்தில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது எனவும் மற்றும் தலைநகரம் கொலை நகராமாகி வருகிறது எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக தலைமை குற்றம் சாட்டியிருந்தது.இந்நிலையில், தமிழகத்தில் எந்த சூழலிலும் குற்றச் செயல்கள் நடைபெறாத ஒரு காலத்தை உருவாக்க வேண்டும் எனவும்,கூலிப்படை முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் குடியரசுத் தலைவர் பதக்கங்கள்,தமிழக முதல்வர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய பின்னர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது:

“எந்தவொரு சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நடைபெறாமல் காவலர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.குறிப்பாக, அரசியல் ரீதியாகவோ,மதம் மற்றும் சாதி காரணமாகவோ வன்முறை நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு திட்டமிட்டு இந்த அரசிற்கு நெருக்கடி ஏற்படுத்த நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

போதைப்பொருள் நடமாட்டம் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும், கூலிப்படையினர் முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும். கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்”,என்று உத்தரவிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்