மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் : தலைமை தேர்தல் அதிகாரி
- மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.
மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் குறித்த பல விதிமுறைகளை விதித்துள்ளார்.
மேலும், தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் கூறுகையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் முதல்முறையாக வாக்களிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சிகிச்சை பெற்று வரும் 900 பேரில் வாக்களிக்கும் தகுதியுடைய 192 பேரை மருத்துவர்கள் தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்காளர் அடையாளஅட்டை மட்டுமின்றி 13ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.