ஆண்கள் டி-சர்ட்,ஜீன்ஸ் அணியக்கூடாது,பெண்கள் துப்பட்டா போடாமல் வேலைக்கு வராக்கூடாது- தமிழக அரசு அரசாணை
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆடைக்கட்டுப்பாடு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஓன்று ஆகும்.அதிலும் குறிப்பாக அலுவலக பணிபுரிபவர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
அந்த வகையில் தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த அரசாணையில், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் வேஷ்டி போன்ற தமிழ் கலாசாரம் மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து அலுவலகம் வரலாம்.ஆண் ஊழியர்கள் டி-சர்ட்,ஜீன்ஸ் போன்ற சாதாரண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் .பெண் ஊழியர்கள் புடவை, சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து வரலாம் என்று அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.