சுடுகாட்டில் இறந்து கிடந்த ஆண் சடலம் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்.
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி அருகே சாந்த தோப்பு என்னும் பகுதியில் ஒரு சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் ஆண் ஓருவரின் சடலம் கிடப்பதாகவும், அவர் இறந்த நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்ருட்டி பகுதியில் உள்ள அன்வர்ஷா பகுதியை சேர்ந்த சக்திவேல் தான் இவர் என்பதும், இவர் நேற்று வீட்டில் ஏற்பட்ட சாதாரண தகராறு காரணமாக மன உளைச்சல் அதிகரித்ததால் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டு இங்கே வந்து படுத்து இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தான் அடுத்த கட்டமாக என்ன நடந்தது என்பது குறித்து தெரியவரும் என கூறியுள்ளனர்.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…