இசைமேதை நல்லபசுவாமியின் நினைவுத்தூண்.! 16 துணை மின்நிலையங்கள் – முதல்வர் திறப்பு.!
ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட இசைமேதை நல்லபசுவாமியின் நினைவுத்தூணை முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ரூ.235.20 கோடி மதிப்பிலான கட்டப்பட்ட 16 துணை மின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். நாமக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் துணை மின் நிலையம் திறக்கப்பட்டது. இதுபோன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் இசைமேதை நல்லபசுவாமியின் நினைவுத்தூணை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட நினைவுத்தூணை காணொலி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் திறந்து வைத்தார்.