தமிழகத்தில் 10,000 கோடி முதலீடு… புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து…

Published by
Kaliraj
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டு உள்ளன. தற்போது 14 புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை, காஞ்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 14 தொழில் நிறுவனங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை 10 ஆயிரத்து 55 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்க தொழில்துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று(திங்கள் கிழமை) நடைபெற்றது. இத்திட்டங்களின் மூலம் புதிதாக 7 ஆயிரம் பேருக்கு  வேலை வாய்ப்புகள் உருவாகும். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டு உள்ளன. தற்போது 14 புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • அதன்படி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ரூ.6,300 கோடி முதலீட்டில், 2,420 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஜேஎஸ்டபுள்யூ நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்;
  • ஸ்பெயின் நாட்டின் மந்த்ரா டேட்டா செண்டர்ஸ் நிறுவனம், சென்னைக்கு அருகில் ரூ.750 கோடி முதலீட்டில் 550 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தகவல் தரவு மையம் அமைக்கும் திட்டம்; ஆசெங் ஹைடெக் நிறுவனம் ரூ.200 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கார்பன் பைபர் தகடுகள் உற்பத்தி திட்டம்
  • சிங்கப்பூர் வேன்ஸ் கெமிஸ்ட்ரி நிறுவனம் ரூ.50 கோடி முதலீட்டில் 750 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின் கழிவு மேலாண்மை வசதி, மறுசுழற்சி மற்றும் விலை மதிப்புமிக்க உலோகங் களை சுத்திகரித்தல் திட்டம்;
  • காஞ்சீபுரம் மாவட்டம் சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில் அபோல்லோ டயர்ஸ் நிறுவனம் ரூ.505 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், டயர்கள் உற்பத்தி விரிவாக்க திட்டம்;
  • ஒரகடத்தில் ஹிரநந்தனி குழுமத்தைச் சேர்ந்த கிரீன்பேஸ் இண்டஸ்டிரியல் பார்க் நிறுவனம் ரூ.750 கோடிமுதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம்;
  • ஸ்ரீபெரும்புதூரில் அமெரிக்காவின் டிபிஐ காம்போசிட்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி முதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ‘விண்ட் பிளேட்’ உற்பத்தி விரிவாக்க திட்டம்;
  • எல்ஐ எனர்ஜி நிறுவனம் ரூ.300 கோடி முதலீட்டில் 325 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்சார வாகனங்களுக்கான மின்கலன் பொதிகள் உற்பத்தி திட்டம்;
  • ஸ்ரீபெரும்புதூரில் தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் ரூ.109 கோடி முதலீட்டில் 50 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்;
  • நெல்லை மாவட்டம் சிப்காட் கங்கைகொண்டான் தொழிற் பூங்காவில் பிரிட்டானியா நிறுவனம் ரூ.250 கோடி முதலீட்டில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பிஸ்கட் தயாரிக்கும் விரிவாக்கத்திட்டம்;
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஐனாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் ரூ.150 கோடி முதலீட்டில் 105 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி திட்டம்;
  • சென்னை அம்பத்தூரில் கிரின் டெக் மோட்டார்ஸ் அண்டு சர்வீசஸ் நிறுவனம் ரூ.90 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பேட்டரி மற்றும் பி.எம்.எஸ் உற்பத்தி செய்யும் திட்டம்;
  • திருவள்ளூர் மாவட்டத்தில் தென் கொரியாவின் எல்.எஸ். ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ரூ.250 கோடியில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மோட்டார் வாகனங்களுக்கான ‘சுவிட்ச்’ உற்பத்தி திட்டம்;
  • திருவள்ளூர் மாவட்டத்தில் கவ்ண்டர் மெசர்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ.51 கோடி முதலீட்டில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் உற்பத்தி திட்டம், என மொத்தம் 14 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதில், சில நிறுவனங்களுடன் காணொலிக்காட்சி மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
Published by
Kaliraj

Recent Posts

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…

1 hour ago

INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

2 hours ago

எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!

சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…

3 hours ago

ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…

4 hours ago

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

4 hours ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

5 hours ago