சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அறிவுறுத்தல்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே, சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று பேரவை தொடங்கியவுடன் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் போது பேசிய கும்பகோணம் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகன் அவர்கள், பேரவையில் இன்று கண்ணியமாகக் கர்வமில்லாமல் அமர்ந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சராக முடியாது என்று சொன்னவர் முகத்தை இந்த மன்றத்தில் பார்க்க முடியவில்லை என்று பேசினார்.
இதனையடுத்து அன்பழகன் அவர்கள் பேசிய போது குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தன்னை பற்றி புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும், மானியக் கோரிக்கைக்கு வாருங்கள், மானிய கோரிக்கைகள் குறித்து பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…