மேகதாது அணை:தமிழக அரசு தொடுத்த அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்…!

Published by
Venu

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் சுமார் 5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு சாத்திய கூறு இருப்பதாக தனது அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தது.ஆனால் இதனை தமிழக அரசு எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம் ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக  மாநில நீர்ப்பாசனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Related image

இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து மட்டுமல்லாமல் தமிழக சட்டமன்றத்தை கூட்டி இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு தீர்மானமும் நிறைவேற்ற உள்ள நிலையில் அனுமதி வழங்கிய மத்திய அரசு மற்றும் திட்டத்தில் உறுதியாக உள்ள கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்தது. இந்த மனுவை மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே தாக்கல் செய்துள்ளார்.

வழக்கில் மத்திய நீர்வள ஆணைய திட்ட அனுமதி இயக்குநராக இருக்கும் என். முகர்ஜி மற்றும் மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன் கர்நாடக மாநில காவிரி நீராவாரி நிகாம் நிறுவன நிர்வாக இயக்குநர் மல்லிகார்ஜூன் பி குகே மற்றும் கர்நாடக மாநில நீர்பாசனத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் மற்றும் அம்மாநிலத்தின் நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் ஆகியோர் மீது மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கானது கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி இருமாநில காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம் தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டு குறிப்பிடப்படும் 5 பேரையும் நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் மற்றும் கர்நாட அரசிற்கு  அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பு செயல்களில் கர்நாடகவோ , மத்திய அரசோ தலையீடாமல் இருக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு தனது மனுவில் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.

Published by
Venu

Recent Posts

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

12 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

13 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

13 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

13 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

14 hours ago

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

15 hours ago