தமிழக சட்டப்பேரவையில் இன்று இறுதி நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மேகதாது அணை விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து கொண்டு இருக்கும்போது, அமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி” கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு கடிதம் அனுப்பியது.
மேகதாது விவகாரம்… ஒரு செங்கல் கூட வைக்க முடியாது.! இபிஎஸ் தீர்மானம் மீது துரைமுருகன் பதில்.!
அந்த கடிதத்தை மத்திய நீர்வள கமிஷன் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியது. கடந்த 2028-ஆம் ஆண்டு மத்திய நீர்வள கமிஷன் இயக்குனர் மீது நாங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு தொடர்ந்தது முதல் காவேரி மேலாண்மை ஆணையத்தில் இந்த மேகதாது அணை குறித்து விவாதிக்கவும், எந்த செயல்பாடுகளும் கொண்டு வரவில்லை என தெரிவித்தார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 1-ம் தேதி அன்று 28-வது காவேரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஆணையத்தின் வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு மேகதாது அணை கட்டுவது பற்றி விவாதத்தை திமுக அரசு அனுமதி வழங்கியது. மேகதாது விவாதம் நமது எதிர்ப்பை மீறி செயல்பட்டு இருந்தால் உடனடியாக அரசு அனுப்பி அதிகாரிகள் அந்த கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்.
அப்படி இல்லையென்றால் எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால் அரசு அனுப்பிய அதிகாரிகள் அந்த கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…