மேகதாது அணை கட்ட வாக்குறுதி… காங்கிரஸ் திரும்பப்பெற வேண்டும்; சீமான் வலியுறுத்தல்.!

NTK Seeman

கர்நாடக சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் தனது அறிக்கையில் மேகதாது அணை கட்ட வாக்குறுதி அளித்துள்ளதற்கு சீமான் கண்டனம்.

கர்நாடகாவில் வரும் மே 10இல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ரூ.9000 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த தேர்தல் அறிக்கைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய காட்சிகள் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் என்பதை மீண்டும் ஒருமுறை இது நிரூபிக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு நிலுவையில் இருக்கும்போது, இந்த தேர்தல் அறிக்கை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுகவிற்கு இது பற்றி எதுவும் தெரியாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேகதாது அணை கட்டும் இந்த தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் உடனடியாக திரும்ப பெறவேண்டும் என சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். திரும்ப பெறவில்லையென்றால், காங்கிரஸ் உடனான ஆதரவை திமுக கைவிடவேண்டும் என சீமான் தெரிவித்தள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்