திட்டமிட்டபடி ஜனவரி 3-ம் தேதி மேகேதாட்டு அணை நோக்கி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விவசாயிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய பி.ஆர்.பாண்டியன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் பேரழிவை சந்திக்கும் என்று கூறினார். இதனை கண்டித்து ஜனவரி 3-ம் தேதி திட்டமிட்டபடி மேகேதாட்டு அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் விவசாயம் அழிந்து வருவதால் என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணியை கைவிட வேண்டும் என கூறிய அவர்,100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கீழணை பலமிழந்து நிற்பதால் மாற்று அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கேட்டுக்கொண்டார்.
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…