மேகதாது அணை விவகாரம் – கர்நாடக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!
மேகதாது அணை கட்டியே தீருவோம் எனும் கர்நாடக அரசின் முடிவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேகதாது அணை தொடர்பாக கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலன் கருதி மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்பொழுது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களும் இது குறித்து கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மேகேதாட்டு பகுதியில் அணைகட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அப்படி ஓர் அணை உருவானால் ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். எனவே, தமிழக அரசு கடிதம் மட்டும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகேதாட்டு அணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். நீதிமன்றத்தின் வழியாகவும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.
இதேபோல் வடமாவட்டங்களின் பாசன ஆதாரமான தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய ஆற்றின் குறுக்கே ஊரடங்கு காலத்தில் கர்நாடகா புதிய அணையைக் கட்டி இருப்பது குறித்தும், இதற்காக கடந்த ஆட்சியில் தமிழகத்திலிருந்து கட்டுமான பொருட்கள் அனுப்பியதாக வெளியாகி உள்ள செய்திகள் பற்றியும் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
மேகேதாட்டு பகுதியில் அணைகட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அப்படி ஓர் அணை உருவானால் ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். (1/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 6, 2021
எனவே, தமிழக அரசு கடிதம் மட்டும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகேதாட்டு அணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். நீதிமன்றத்தின் வழியாகவும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். (2/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 6, 2021
இதேபோல் வடமாவட்டங்களின் பாசன ஆதாரமான தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய ஆற்றின் குறுக்கே ஊரடங்கு காலத்தில் கர்நாடகா புதிய அணையைக் கட்டி இருப்பது குறித்தும், (3/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 6, 2021
இதற்காக கடந்த ஆட்சியில் தமிழகத்திலிருந்து கட்டுமான பொருட்கள் அனுப்பியதாக வெளியாகி உள்ள செய்திகள் பற்றியும் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும். (4/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 6, 2021