மேகதாது அணை: தமிழக அரசுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்!!
மேகதாதுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்றும் தமிழ் மக்களின் நலன் கருதி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முன்பாகவே, தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து அணை கட்டாமல் தடுத்திடவேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் மேகதாது அணை கட்ட அனுமதி தர மாட்டோம் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும், நதிநீர் பிரச்னை தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டதாகவும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முன்பாகவே, @CMOTamilnadu தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து அணை கட்டாமல் தடுத்திடவேண்டும். pic.twitter.com/m5YyDY68wZ
— Vijayakant (@iVijayakant) July 8, 2021