அணை கட்ட அனுமதி கொடுங்க..! இல்ல கொடுக்காதீங்க..! முதல்வர்கள்…!
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நீர்வளம் மற்றும் ஆதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை தமிழ்நாடு மற்றும் கர்நாடக முதலமைச்சர்கள் சந்தித்து உள்ளனர்.
முன்னர் நீர்வளம் மற்றும் ஆதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை கர்நாடக முதல்வர் சந்தித்தார்.இந்த சந்திப்பில் மேகதாது அணை கட்ட அனுமதி மறுத்ததே கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் ஆகையால் மேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை விடுத்தார்.
அதனை தொடர்ந்து இவ்ருக்ளுடைய சந்திப்பு நடந்த நிலையில் தமிழக முதல்வரும் மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வளம் மற்றும் ஆதாரத்துறை அமைச்சரை சந்திக்கிறார்.அதில் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என நேரில் வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கொடுக்காமல் கர்நாடகம் பிடிவாதம் காட்டி வருகின்றது.இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.