இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்..!
இன்று தமிழகம் முழுவதும் 20 மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த தடுப்பூசி முகாம் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் 20 மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.