தமிழகம் முழுவதும் நடைபெறும் முகாம்களில் 6 மணி நிலவரப்படி 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், மூன்றாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அதே சமயத்தில், கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் சுமார் 10000க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்பட்டது. இதில் இதுவரை இல்லாத அளவிற்கு 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து இன்று இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம், சுமார் 20 ஆயிரம் மையங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெறும் முகாம்களில் 6 மணி நிலவரப்படி 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்றும் தடுப்பூசிகள் கையிருப்பு தட்டுப்பாடுகள் உள்ளது எனவும் கூறியுள்ளார். செப்டம்பர் மாதத்தில் இதுவரை 1 கோடி பெருகும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் தடுப்பூசி கையிருப்பு இருந்ததால், சிறப்பாக செயல்பட முடிந்தது எனவும் தெரிவித்தார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…