தமிழகம் முழுவதும் 6000 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் உள்பட 6,000 மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கி நடைபெறுகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.அமைச்சர் சேகர்பாபு மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
இதனையடுத்து,செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது:
“சென்னையில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தவும்,மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று காய்ச்சல், சளி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் தற்போது 70 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.நாளை 50 ஆயிரம் இடங்களில் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.நவம்பர் இறுதிக்குள் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது”,என்று தெரிவித்தார்.
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…