இந்தியா முழுவதும் மீடு என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டலகளை பகீரங்கமாக வெளிபடுத்தி வருகின்றனர்.இந்த மீடு புயல் மத்தியில் ராஜினா சேதம் மற்றும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இப்புயல் கர்நாடக இசையையும் மீடுபுயல் கதிகலங்க வைத்துள்ளது மீடுவில் பாலியல் புகாருக்கு ஆளான கர்நாடக கலைஞர்களான சித்ரவீணா ரவிக்கிரன், ஓ.எஸ். தியாகராஜன் உட்பட 7 பேர் மீது கர்நாடக சங்கீத வித்வான்கள் மார்கழி விழாவில் இருந்து வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக இசை கலைஞரான 71 வயது ஓ.எஸ்.தியாகராஜன் தன்னிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள வந்த மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் சீண்டல் மற்றும் அத்துமீறலில் ஈடுபடமுயன்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதே போல மற்றொரு கலைஞரான சித்ரவீணா மற்றும் சங்கீத கலாநிதினு பட்டம் பெற்ற ரவிக்கிரண், மற்றும் மிருதங்க சக்கரவர்த்திகளாக தங்களை காட்டிக் கொண்ட மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவாரூர் வைத்தியனாதன், வயலின் வித்வான்கள் ஆர்.ரமேஷ் மற்றும் நாகை ஸ்ரீராம் ஆகியோர் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பாலியல் சீண்டல் குறித்து மீடூவில் பதிவிட்டனர்.
இந்த மீடு பாலியல் குற்றச்சாட்டில் கர்நாடக இசை கலைஞர் நாகை ஸ்ரீராமை தவிர மற்ற 6 பேரும் 50 வயதை கடந்தவர்கள் பாலியல் புகாரில் சிக்கி உள்ள இவர்கள் 7 பேரும் வருகிற டிசம்பர் மாதம் சென்னை மியூசிக் அகடாமியில் நடக்கும் மார்க்கழி திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும் இவர்கள் 7 பேரும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது உண்மையாக நிரூபிக்கப்பட்டால் மியூசிக் அகாடமியில் இருந்தே உடனடியாக நீக்கப்படுவார்கள் என மியூசிக் அகடாமி தலைவர் முரளி தெரிவித்தார்.
இசை வரமாக கருதப்படும் இந்த உலகில் இசைத்துறையில் இருந்து கொண்டு இப்படி பெண்களிடம் விபரீத நடவடிக்கைகளில் இறங்கியதாக புகார் எழுந்ததால் இசை கலைஞர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுதாக முரளி தெரிவித்தார்.இந்நிலையில் ஏற்கனவே மீடூ பாலியல் புகாரால் தமிழ் திரையுலகம் திணறி வரும் நிலையில் இப்பொழுது கர்நாடக இசை உலகம் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…