தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியை நன்றி தெரிவிக்க சந்தித்தேன் என்று த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தமாக தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஆகிருடன் பாஜக மக்களவைத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் நேற்று சந்தித்து பேசினார்.
இதை தொடர்ந்து இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் அறிவித்தார். இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலில் சந்திக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.
ஜி.கே வாசன் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் தமாகாவின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் தமாகாவில் இருந்து யுவராஜா விலகி அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா எடப்பாடி பழனிசாமி உடன் நடத்திய சந்திப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியுள்ளார். அதில்” கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமாகா, அதிமுக கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம் அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம்.
தலைவர் G.K.வாசன் அவர்கள் பா.ஜ.க வுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்கள். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் இவர்கள் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களைச் சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…