இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை கூட்டம்.. கொரோனா பாதுகாப்பு உடையுடன் பயணித்த அமைச்சர்!

தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ள கொரோனா பாதுகாப்பு உடை (PPE kit) அணிந்து விமானத்தில் சென்னைக்கு பறந்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், கடந்த மார்ச் மாதம் 23- ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று முதல் 3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து விமான மூலமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
அவருடன் விளாத்திகுளம் எம்.எல்ஏ. சின்னப்பன், தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் விமானத்தில் பயணம் செய்தனர். விமான பயணத்தின்போது, கொரோனா பாதுகாப்பு உடை (PPE kit) அணிந்து விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு பயணித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025