45 மிமிடங்கள்., தமிழக கோரிக்கைகள்.! பிரதமர் மோடி – மு.க.ஸ்டாலின் சந்திப்பு.!
தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
டெல்லி : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார். இதற்காக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.
இன்று காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனிலிருந்து பிரதமரை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கு தேவையான முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைக்க உள்ளார் என்று கூறப்பட்டது.
சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்க வேண்டும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு இந்த கல்வியாண்டில் ஒதுக்க வேண்டிய சுமார் ரூ.3500 கோடியில் முதல் தவணை கூட இன்னும் வரவில்லை என்பது குறித்தும், இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நிகழ்ந்தாகவும் இந்த சந்திப்பில், தமிழ்நாட்டிற்கான கோரிக்கைகள் தொடர்பான மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.