#breaking:மீரா மிதுனுக்கு 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் – நீதிமன்றம் உத்தரவு..!
மீரா மிதுனை வருகின்ற 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று கைது செய்தனர். அங்கு நெருங்கிய ஒருவருடைய நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் தங்கி இருந்தாக தகவல் கிடைத்ததை அடுத்து உடனடியாக சென்னை சைபர் க்ரைம் போலீசார் நேரடியாக அங்கு சென்று கைது செய்தார்கள்.
மீரா மிதுனுவை கைது செய்யும்போது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம் செய்வதாகவும், காவல்துறை என் மீது கை வைத்தால் நான் கத்தியால் குத்திக்கிட்டு செத்து போய்டுவேன் என ஒரு பரபரப்பான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டியிருந்தார்.
இதனையடுத்து,கேரளா நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர்படுத்தி,அனுமதி (TRANSIT WARRANT) பெற்றுக் கொண்டு, போலீஸ் வாகனம் மூலமாக,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துவந்தனர்.இதனையடுத்து,காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் மீரா மிதுனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.ஆனால்,அவர் சரியான ஒத்துழைப்பு வழங்வில்லை என தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து,அவர் சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.இந்நிலையில்,வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் அவர்கள் மீரா மிதுனை வருகின்ற 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.ஆனால்,எந்த சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் அவரது ஆண் நண்பர் ஆகாஷ் என்பவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.