மீரா மிதுன் – லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு!
மீரா ரா மிதுன் தலைமறைவாக உள்ள விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு.
நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ள விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டியலினத்தவரை இழிவாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைதாகி, சிறையிலடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருந்தார்.
குற்றப்பத்திரிகை தாக்கலாகி, சாட்சி விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாமல் தலைமறைவானதால் பிடிவாரண்ட் அளிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதால், லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீரா மிதுனை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தாய் சியாமிளா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.