மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை…!!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய இவர், மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த அகாற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. வட தமிழகத்தில் அநேக இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இடைவெளி விட்டு அவ்வப்போது மிதமான மலை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.