நாளை முதல் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல தடுப்பூசி அவசியம்..!

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதி
டிசம்பர் 13-ஆம் தேதி அதாவது நாளை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் 3-வது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் (டோஸ்) செலுத்தியவர்கள் மட்டுமே 13.12.2021-ந் தேதி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
திருக்கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் கீழ்கண்ட ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே கண்டிப்பாக திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
1) கோவிட் தடுப்பூசி சான்றிதழ் நகல் வைத்திருப்பது.
2) கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ்.
3) பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் குறுந்தகவல் வைத்திருப்பது 4
) Whatsapp செயலி மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்.
5) கைபேசி எண் மூலமாக கோவின் இணையதளத்தில் உறுதி செய்வது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025