இன்று முதல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் பிரசாதம் லட்டு! தினமும் 20,000 லட்டுகள் ரெடி!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக லட்டு கொடுப்பது வழக்கம். திருப்பதி லட்டு உலகம் முழுக்க பிரபலம். தற்போது அதே போலமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று முதல் பிரசாதமாக லட்டு வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் லட்டுகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லட்டு தயாரிக்கும் செலவுகள் கோவில் காணிக்கையில் இருந்து தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.