உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 150 கோடி மதிப்பிலான நிலத்தை தனிநபர் அதிகாரிகளின் துணையோடு அபகரித்து உள்ளார் என்று புகார் எழுந்து உள்ளது.
அறநிலை கட்டுப்பாட்டில் இருந்து வரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அபகரிக்கபட்டுள்ளது.
கோவிலுக்கு சொந்தமாக மாவட்டம் முழுவதும் பல கோடிக்காணக்கான சொத்துகள் உள்ளது.இதில் மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள 150 கோடி மதிப்பிலான 14 ஏக்கர் நிலமும் அடங்கும்.இதில் 4 ஏக்கர் நிலத்தை நிர்வாகத்தின் மேற்பார்வையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அறநிலை துறை அவ்வபோது ஆய்வு செய்வது வழக்கம் அதே போல் அண்மையில் ஆய்வு செய்த போது நிலம் அபகரிகரிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டு அதிர்ந்துள்ளனர். தனிநபர் ஒருவரின் பெயரில் நிலம் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஆய்வில் களமிறங்கிய அறநிலை துறைக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தனிநபர் ஒருவர் அந்நிலங்களை அரசு வருவாய்த்துறை அலுவலர்களின் துணையோடு பட்டாவை மாற்றம் செய்து உள்ளார் என்று தெரியவந்தது.
நில மோசடி செய்யப்பட்டுள்ளதை உறுதி படுத்திய அறநிலையத்துறை சார்பில், மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் மதுரை பொறுப்பு ஆட்சியராக தற்போது இருந்து வரும் சாந்தாராமிடம் புகார் மனுவை இணை ஆணையர் நடராஜன் அளித்தார்.
இது கூறித்து இணை ஆணையர் நடராஜன் கூறுகையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 150 கோடி மதிப்பிலான நிலத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாகவே இடத்தை பட்டா மாறுதல் செய்ய பல முயற்சிகள் நடந்ததது.ஆனால் இந்த விவகாரம் மாவட்ட வருவாய் அலுவலர்க்கு தெரியவரவே அவருடைய கண்டிப்பான நடவடிக்கையை தொடர்ந்து அந்த முயற்சி கைவிட்டுள்ளார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் கவனம் பெற்ற வருவாய் அலுவலர் கண்டிப்பையும் மீறி சில நாட்களிலேயே அரசு வருவாய் துறை அதிகாரிகளின் உதவியோடு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் தனிநபர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டை மாவட்ட ஆட்சியர் உரிய விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலும் அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது என்று கூறினார்.
“கோவில் சொத்து குல நாசம் ” என்ற ஆன்றோர்களின் வாக்கை என்று பலரும் மறந்து விடுகிறார்கள்.மேலும் கோடிக்கான சொத்துகள் அபரிகரிப்பு செய்யும் வரை அறநிலைய துறை என்று செய்து கொண்டிருந்தது என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…