வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மனைவியும்,உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்களின் தாயாருமான மீனா சுவாமிநாதன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.இதனையடுத்து,அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில்,முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று, உடல்நலக்குறைவால் காலமான எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மனைவி திருமதி மீனா சுவாமிநாதன் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில்,சிறந்த கல்வியாளராகவும் பன்முகத்தன்மையாளராகவும் விளங்கிய மீனா சுவாமிநாதன் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று கூறி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான,இரங்கல் அறிக்கையில் முதல்வர் கூறியிருப்பதாவது:
“வேளாண் ஆய்வறிஞர் திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களது வாழ்க்கைத் துணைவியார் திரு மிகு. மீனா சுவாமிநாதன் அவர்களது மறைவுச் செய்தியறிந்து வருந்தினேன்.
சிறந்த கல்வியாளராகவும் பன்முகத்தன்மையாளராகவும் விளங்கிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது.அவரது மறைவால் வாடும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…