காதலை மறக்க தியானம்! அத்துமீறிய அர்ச்சகர்!

Default Image

காதலை மறக்க தியானம் மேற்கொண்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அர்ச்சகர்.

போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் சந்திரமவுலி. இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இந்த அர்ச்சகர் மீது, காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்பெண் அளித்துள்ள புகாரில், ‘கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பதாக நான் ஒருவரை காதலித்து இருந்தேன். அந்த காதலை மறப்பதற்காக அர்ச்சார் சந்திரமவுலி என்னை தனி அறைக்கு அழைத்து சென்றார். அணு அவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

அப்பெண் அளித்த புகாரின் பெயரில், அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்