#BREAKING: ஊரடங்கை 2 வாரம் நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை..!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கை 2 வாரம் நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை வழங்கியுள்ளது.
நாளை மறுநாளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
மருத்துவ குழு ஆலோசனைக்குப் பின் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.