train [Imagesource : SN]
மதுரையில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தடய அறிவியல் துறையின் பேராசிரியர்கள் சந்திரசேகரன், சதாசிவம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை இறந்தவர்களின் 9 பேரின் உடல்களை 20 பேர் கொண்ட மருத்துவக்குழு பிரேத பரிசோதனை செய்கிறது.
இன்று காலை மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் சுற்றுலா ரயிலின் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட சிலிண்டரே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பான ஆய்வுகள் சம்பவ இடத்தில் நடைபெற்று வரும் நிலையில், தீ விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் ஆன்மிக பயணம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் அந்த ரயிலில் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…
கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…