தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69% இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்படுமா..? என மத்திய அரசின் நிலைபாட்டை தெரிவிக்க உத்தரவு.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த திமுக அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த இடஒதுக்கீடு
அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இந்த ஆண்டிற்கு ஒதுக்கீடு வழங்குவது என்பது சாத்தியமில்லாதது என தெரிவித்தனர். அடுத்த கல்வியாண்டில் அதாவது இந்த கல்வியாண்டில் எவ்வளவு சதவீதம் அமல்படுத்த முடியும் என அறிவித்து விட்டு இந்த ஆண்டு சேர்க்கையில் அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இதுதொடர்பாக மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு எவ்வாறு அமல்படுத்தப்படும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் இட ஒதுக்கீடு எவ்வாறு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…