மருத்துவ படிப்பு ஒதுக்கீடு.., இன்று ஆலோசனை.!
மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து இன்று ஆலோசனை.
மருத்துவபடிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் நாளை மாலை 4:30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.