தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர், படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என நிபந்தனை உள்ளது. இவர்கள் இரண்டு ஆண்டுகள் பணியை முடித்த பின்பு தான் இவர்களுக்கு சான்றிதழ் திரும்ப வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதனை எதிர்த்து,சென்னை உயர் நீதிமன்றத்தில் 276 மருத்துவ மாணவ, மாணவிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாணவ மாணவிகள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர்களின் சான்றிதழ்களை திரும்ப வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து, தமிழக அரசு சார்பில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். படிக்கும் மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பையும் உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்ததுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…