வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்த 80 மாணவர்களுக்கு சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி பெற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்து முடித்த மாணவர்கள், மத்திய அரசு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், அதன் பிறகு ஒரு ஆண்டு சொந்த மாநிலத்தின் மருத்துவமனைகளில் பயிற்சி பெற வேண்டும். அதன் பின்னரே மருத்துவர்களாக பணியாற்ற முடியும்.
அந்த வகையில் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை பயின்ற 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களை பயிற்சி மருத்துவராக அனுமதிக்க கோரி விண்ணப்பித்திருந்தனர். தற்போது தமிழக அரசு அதில் 80 பேரை சென்னையில் உள்ள 4 மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக பணிபுரிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
எம்.ஜி.ஆர் மருத்துக்கல்லூரியில் தடையில்லா சான்று பெற்றுக்கொண்ட பிறகு, இந்த 80 மருத்துவ மாணவர்களும் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக பணிபுரியலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…