தமிழகத்தில் இன்று 4 மணி நேரம் மருந்து கடைகள் மூடப்படும் என்று மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாக வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது.அதன்படி தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை அனைத்து மருந்து கடைகள் மூடப்படும் என்று மருத்துவ வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வணிகர் சங்க பேரமைப்பு நடத்தும் கடையடைப்பிற்கு ஆதரவு அளித்து மருத்துவ வணிகர்கள் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்து தெரிவித்துள்ள வணிகர் சங்க பேரவை கூறியுள்ளதாவது: சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், சம்பவத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.கடையடைப்பை தொடர்ந்து மாலை 5 மணிக்கு உயிரிழந்த வியாபாரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…