மருந்துக்கடைகளை மூடுங்கள்-வணிகர் சங்கம் அறிவிப்பு

Default Image

தமிழகத்தில் இன்று 4 மணி நேரம் மருந்து கடைகள் மூடப்படும் என்று மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்  நடைபெறுவதாக வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது.அதன்படி தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை அனைத்து மருந்து கடைகள் மூடப்படும் என்று  மருத்துவ வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வணிகர் சங்க பேரமைப்பு நடத்தும் கடையடைப்பிற்கு ஆதரவு அளித்து மருத்துவ வணிகர்கள் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து தெரிவித்துள்ள வணிகர் சங்க பேரவை கூறியுள்ளதாவது: சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், சம்பவத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்  நடைபெறும்.கடையடைப்பை தொடர்ந்து மாலை 5 மணிக்கு உயிரிழந்த வியாபாரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்