சென்னையில் உள்ள அம்பத்தூர் பகுதியை அடுத்த மாதக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார் ஆவார்.இவர் டெய்லர் தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் இவர் நேற்று மாலை தோள்பட்டை வலி தாங்க முடியாமல் அருகில் உள்ள ஸ்ரீ சக்தி மெடிக்கலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு இருந்த மெடிக்கல் கடை உரிமையாளர் பாஸ்கரனிடம் ரொம்ப தோள்பட்டை வலிக்கிறது என்று கூறியுள்ளார்.அதை கேட்ட மெடிக்கல் உரிமையாளர் அவருக்கு ஒரு ஊசியை பரிந்துரை செய்துள்ளார்.
அந்த ஊசியை போட்டவுடனே குமார் மயக்கமடைந்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த மெடிக்கல் உரிமையாளர் உடனே மருத்துவமனையில் குமாரை சேர்த்துள்ளார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
பின்னர் குமாரின் உடல் உடற்கூறு ஆய்விற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இதன் காணமாக குமார் மனைவி மீனா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவர் கூறுகையில் மக்கள் பொதுவாக தங்களுக்கு உடல்நலம் சரியில்லை எனில் மருத்துவமனைக்கு செல்வதில்லை,அருகில் உள்ள மெடிக்களிலேயே மருந்து வாங்கி உட்கொள்கின்றன.
மெடிக்களில் பணிபுரிபவர்கள் நிறைய பேர் 10-ம் 12-ம் வகுப்பு முடித்தவர்களாகவே உள்ளனர்.அதனால் அவர்களுக்கு எந்த நோய்க்கு எந்த மருந்து கொடுக்க வேண்டும் என்று தெரிவதில்லை.
அதனால் மக்கள் முடிந்தவரை மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவதே சரியானது என்று கூறியுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…