கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பிரியாவிற்கு வயிற்றில் அதிக வலி ஏற்பட்டதையடுத்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதை தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனையில் அந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். பிரசவத்தின் போது வயிற்றில் மருத்துவர்கள் தவறுதலாக துணியை வைத்து தைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உறவினர்கள், பச்சிளம் குழந்தையுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுட்டதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
பின்னர் இந்த சம்பவத்தை அறிந்து அந்த இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர், பெண் உயிரிழப்பு குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…