இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!

தமிழக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசி தற்போது கையிருப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளதாகவும் தமிழகத்திற்கு போதிய கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும் படி கோரிக்கை வைப்பதற்காக டெல்லி பயணம் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.