தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₹18,661 கோடி ஒதுக்கீடு என நிதியமைச்சர் அறிவிப்பு.
2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அப்போது, பட்ஜெட் உரையில், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் ரூ.1,500 கோடியில் பள்ளி கல்வித்துறையில் வகுப்பறைகள் கட்டப்படும். ரூ.110 கோடி செலவில் 4, 5ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும். சென்னை உள்ளிட அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
அனைத்து துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறை கீழ் செயல்படும் என தெரிவித்தார். மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவித்தார்.
சென்னை கிண்டியில் கட்டப்படும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பன்னோக்கு சிகிச்சை மையம் மற்றும் செவிலியர் விடுதி கட்டப்படும். 711 தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு மக்களை தேடுக மருத்துவம் விரிவுபடுத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…